Tuesday 9 September 2014





ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய படம் கோலிசோடா. 

குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படம்.
இந்தப் படம் ஏற்கெனவே பல படவிழாக்களில் கலந்து கொண்டுள்ளது.
தற்போது தென்கொரியாவில் நடக்கும் பூஷான் சர்வதேச திரைப்பட விழாவில்
திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆசிய படங்களின் வரிசையில் வருகிற
செப்படம்பர் 2ந் தேதி திரையிடப்படுகிறது. அன்றைய தினம்தான் கோலிசோடாவின்
தெலுங்கு பதிப்பும் வெளியாகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ள தயாரிப்பாளர் பரத், 
இயக்குனர் விஜய் மில்டனுடன் நடிகர் விக்ரமும் செல்கிறார்கள். இதுகுறித்து விஜய் 
மில்டன் கூறும்போது: 
இப்படி ஒரு பட விழா நடப்பதுகூட எனக்குத் தெரியாது. விக்ரம்தான் படத்தை பார்த்து வியந்து அதனை அந்த பட விழாவில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். இப்போது படம் பங்கேற்க தேர்வாகி இருப்பது எதிர்பாரத மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்றார்.

SOURCE

DINAMALAR

கொரிய பட விழாவுக்கு செல்கிறது கோலிசோடா!



கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி, கமல் தவிர மற்ற நடிகர்கள் ஒரு கோடி சம்பளம் வாங்கினால்அதுவே பெரிய செய்தி. இன்றைக்கு முதல்படத்தில் பணம் கொடுத்து அறிமுகமாகும் நடிகர் அந்த படம் ஹிட்டாகிவிட்டால் அடுத்த படத்துக்கு கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கிறார். கோடிக்கு குறைவாக
சம்பளம் வாங்கினாலும் வெளியில் அத்தனை கோடி சம்பளம்,
இத்தனை கோடி சம்பளம் என்று சொல்லி இமேஜை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் கோடியை தாண்டினாலும் நடிகைகள் சம்பளம் லட்சங்களுக்குள்ளேயேதான் புரண்டு கொண்டிருந்தது. இந்தி நடிகைகள்தான் கோடி கணக்கில் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தார்கள். காரணம் இந்தி பேசும் 8 மாநிலங்கள் அந்த படங்களின் வியாபார பரப்பு என்பதால் அந்த சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்களும் தயங்குவதில்லை.

நயன்தாரா

தென்னிந்திய நடிகைகளும் இப்போது கோடிக் கணக்கில் சம்பளம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
என்னதான் புலம்பினாலும் தயாரிப்பாளர்களும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த கோடி புண்ணியத்தை முதலில் துவக்கி வைத்தவர் நயன்தாரா. பிகினி அழகுடன் தோன்ற
பில்லா ரீமேக்கில் ஒரு கோடி சம்பளம் நிர்ணயித்தார் நயன்தாரா. அன்று முதல் அவர் சம்பளம்
கோடிகளில்தான். இது கதிர்வேலன் காதல் படத்தில் உதயநிதி ஒண்ணே கால் கோடியை அள்ளிக்
கொடுத்து உயர்த்தி வைத்தார். இது நம்ம ஆளு படத்தில் மாஜி காதலுடன்
நடிப்பதை தட்டி கழிப்பதற்காக சும்மானாச்சும் இரண்டு கோடி கேட்க அதை தர தயார்
என்று தாடி டாடி அறிவிக்க... சம்பளம் இரண்டு கோடியானது. ஆஹா... இது ரொம்ப நல்லா இருக்கே என்று அப்படியே காதல்
சமாச்சாரங்களை தூக்கிப்போட்டுவிட்டு கோடிகளை நோக்கி நகர ஆரம்பித்தார். தன்
வினை தன்னை சுடும் என்பதை போல நயனின் சம்பளத்தை ஏற்றிவிட்ட உதயநிதியின்
நண்பேண்டா படத்துக்கு சுளையாக 2 கோடியே 30 லட்சம் சம்பளம். தென்னிந்திய நடிகைகளில்
இவரே சம்பளத்தில் நம்பர் ஒண்.

சமந்தா 

மாஸ்கோவின் காவிரி, பாணா காத்தாடி படங்களில் நடித்து யாரென்றே தெரியாமல் இருந்த
சமந்தாவை தெலுங்கு விண்ணை தாண்டி வருவாயா விண் முட்டும் அளவுக்கு உயர்த்தியது. அடுத்த
படமே எஸ்.எஸ்.ராஜமவுலியின் நான் ஈ. சமந்தா சமர்த்தாக காய் நகர்த்தியதில் இன்றைக்கு தெலுங்கு,
தமிழில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். கூட நடிப்பது யார், என்ன கதை, என்ன படம், படம்
ரிலீசாகுமா ஆகாதா? அதைபற்றியெல்லாம் கவலையே கிடையாது.
சுளையா ஒரு கோடியை எடுத்து வையுங்க. 30 நாள் கால்ஷீட்டை கையில புடிங்க என்பதுதான் சமந்தா பாலிசி.

அனுஷ்கா

அனுஷ்கா பொம்பள விக்ரம். ஒரு படத்துக்கு ரொம்ப மெனக்கெடுவார். கடுமையாக உழைப்பார்.
அதனால் இவரது சம்பளத்தை ஒரு கணக்கிற்குள் வைக்க முடியாது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும்
லிங்கா படத்துக்கு ஒண்ணறை கோடி சம்பளம் என்கிறார்கள். ராஜமவுலியின் பாகுபாலிக்கு 5
கோடி என்றும், ராணிருத்ரமாதேவிக்கு 3 கோடி என்றும் சொல்கிறார்கள். லிங்காவுக்கு 20 நாள் கால்ஷீட் பாகுபாலிக்கு 120 நாள் கால்ஷீட், ருத்ரமாதேவிக்கு 90 நாள் கால்ஷீட் அதனால்தான் இந்த
வித்தியாசம். இவரும் சுந்தர்.சி. இயக்கிய ரெண்டு என்ற படத்தில் நடித்து ஆள் சுமார்தான்
என்று தெலுங்கு பக்கம் விரட்டி அடிக்கப்பட்டவர்.

ஹன்சிகா 

சின்ன குஷ்புவாக தமிழ் சினிமாவுக்கு வந்தவர். இன்று குஷ்புவே அவரின் கால்ஷீட்டுக்காக
காத்திருக்கும் இடத்தில் இருக்கிறார். தெலுங்கில் 2 கோடி வரை தமிழில் ஒண்ணறை கோடி வரை இதுதான் ஹன்சிகாவின் இன்றைய சம்பளம். சுந்தர் சி அடுத்து இயக்கும், ஆம்பள படத்திற்கு சம்பளம் பெறாமல் அந்த சம்பளத்தை மூலதனமாக போட்டு இணை தயாரிப்பாளராயிருப்பதாக சொல்கிறார்கள். டாக்டர் தாய்குலம்
அருகிலேயே இருப்பதால் நோ மேனேஜர், நோ புரோக்கர்ஸ், நோ கமிஷன் எல்லாமே நேரடி டீலிங்தான். சம்பளத்தில் 10 சதவிகிதத்தை அநாதை குழந்தைகளுக்கு செலவிடும்
அழகு தேவதை ஹன்சிகா. 

ஸ்ருதி ஹாசன்

நம்ம உலக நாயகனின் வாரிசு ஸ்ருதி ஹாசன், கோடி கிளப்பில் சேர்ந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.
ஏழாம் அறிவு படத்தில் 50 லட்சமும், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் 40 லட்சமும் வாங்கிக்
கொண்டு நடித்த ஸ்ருதி அப்படியே பாலிவுட்டுக்கு சென்று, டோலிவுட்டில்
கவர்ச்சி காட்டி மீண்டும் கோலிவுட்டு வந்து பூஜை போட்டுவிட்டார். பூஜைக்கு அவர்
வாங்கியுள்ள சம்பளம் ஒரு கோடியே பத்து லட்சம் என்கிறார்கள். இந்த பஞ்சபாண்டபிகள்தான் இப்போதைக்கு கோடீஸ்வரிகள் கிளப்பில் சேர்ந்திருப்பவர்கள்.

லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா
தற்போது 60 லட்சத்தை தொட்டிருக்கும் லட்சுமி மேனன், 50 லட்சத்தை நெருங்கி இருக்கும்
ஸ்ரீதிவ்யா, ப்ரியா ஆனந்த், ஆகியோர் விரைவில் கோடி கிளப்பில் சேரலாம். அதற்கான அறிகுறிகள்
தெரிகிறது. இந்த மூவரும் படத்தில் எப்படி நடிக்கிறார்களோ அது வேறு, ஆனால் படம்
ஹிட்டாகி விடுகிறது. அதிர்ஷ்டகாற்று அல்ல புயலே இவர்கள் பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது. த்ரிஷா, ஆண்ட்ரியா பத்து ஆண்டுகள் பறந்து பறந்து நடித்துக் கொண்டிருக்கும் த்ரிஷா கடைசி வரை கோடியை தொட முடியவில்லை.

 நடிகைகளின் சம்பளம் கோடியை தொட்டபோது த்ரிஷாவின் வயது 30ஐ தொட்டுவிட்டது. அதனால் தற்போது சீனியர் நடிகர்களின் ஜோடியாகிவிட்டார். 70 லட்சத்திலிருந்து 85 லட்சம் வரை சம்பளம். இதே நிலைதான் ஆண்ட்ரியாவுக்கு. அவருக்கும் 30 வயது நெருங்கிவிட்டதால் என்னதான் நடித்தாலும், நடித்த படம் ஹிட்டானாலும் சம்பளம் 30 லட்சத்தை தாண்டவில்லை. ஆட்டம், பாட்டு, ஹீரோயின் என பேக்கேஜாக சான்ஸ் கொடுத்தால் 50 லட்சம் வாங்குவார்.
எப்படிப் பார்த்தாலும் இப்போது ஹீரோயின்கள் காட்டில் பண மழைதான்.
இன்று கோடி வாங்குகிறவர்கள் நாளை லட்சத்துக்கு வரலாம். லட்சம் வாங்குகிறவர்கள்
கோடிக்கு செல்லலாம். ஏன்னா வாழ்க்கை மட்டுமில்லீங்கண்ணா... சினிமாவும் ஒரு வட்டம்
தானுங்கண்ணா...!!

SOURCE

DINAMALAR

கோடீஸ்வரிகளாகும் தமிழ் நடிகைகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!




இயக்குனர் மற்றும் காமெடி நடிகர் ஒருவர், ஸ்ரீதர் இயக்கிய, காதலிக்க நேரமில்லை படத்தை ரீமேக் செய்ய விரும்பினார். அதற்கான உரிமத்தை வாங்க அப்போது நோய்வாய்பட்டிருந்த
ஸ்ரீதரை சென்று சந்தித்தார். அப்போது ஸ்ரீதர் "ஹீரோவாக யாரை போடுகிறாய்" என்று கேட்டார்.
முத்துராமன், ரவிச்சந்திரன் கேரக்டருக்கு இரண்டு இளம் ஹீரோக்களின் பெயரை சொல்லியிருக்கிறார். "நான் கேக்குறது ஹீரோவா யாரை போடப்பேறேன்னு" என்று திருப்பி கேட்டிருக்கிறார் ஸ்ரீதர்.
அவருக்கு ஒன்றும் புரியவில்லை. முத்துராமனும், ரவிச்சந்திரனும் தானே ஹீரோக்கள் என்றார்.
"அடேய்... மடையா படத்தோட டைட்டில் கார்டை பார்த்தியா அதுல டி.எஸ்.பாலையா பேர்தான் முதல்ல
வரும். அவர்தான் படத்தோட ஹீரோ. அவர் அளவுக்கு நடிக்கிறதுக்கு ஆளைக் கொண்டுவா ரீமேக்
ரைட்ஸ் தருகிறேன்" என்றாராம். இன்று வரை அந்த இயக்குநர் கம் நடிகரால் பாலையாவின்
இடத்தை நிரப்பும் நடிகரை கண்டுபிடிக்க முடியவில்லை. இப்போது இல்லை எப்போதுமே கண்டுபிடிக்க முடியாது. காரணம் அவர் காலத்தை வென்ற மகத்தான குணசித்திர கலைஞர்.

அவரது நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிறது. அரசு கொண்டாடுமா?

அல்லது சினிமா கொண்டாடுமா என்று தெரியாது. 

ஆனால் அந்த மகத்தான கலைஞனை மக்களுக்கு நினைவூட்டும் தார்மீக கடமை தினமலர் இணையதளத்திற்கு இருக்கிறது...
சர்க்கஸ் கலைஞனாக... தற்போதைய தூத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டை என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் பாலையா. சின்ன வயதிலேயே கைதட்டலுக்கும், பாராட்டுக்கும் ஏங்கியவர். அதில் ஒரு மயக்கத்தை கண்டவர். எதையாவது செய்து மற்றவர்களின் பாராட்டை பெறுவதில் அவருக்கு ஒரு மயக்கம் இருந்தது. கோவில் குளத்தில் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பார். ஆற்றை இக்கரையிலிருந்து அக்கறைக்கு நீந்தி கடப்பார்.
முரட்டு காளைகளை அடக்குவார். எல்லாமே மற்றவர்களின் கைதட்டலுக்காக.
அப்போது தூத்துக்குடியில் ஒரு சர்க்கஸ் கம்பெனி முகாமிட்டிருந்தது. அதை பார்க்கப் போனார் பாலையா. அதில் சர்க்கஸ் கலைஞர்கள் வித்தை காட்டி முடித்ததும் எல்லோரும்
கைதட்டுவதை பார்த்தார். நாமும் சர்க்கஸ் கம்பெனியில் சேர்ந்து வித்தை செய்தால் மக்கள்
கைதட்டுவார்கள் என்று நினைத்தார். அந்த கம்பெனியில் வேலை கேட்டார் ஆனால் பாலையாவின்
தோற்றத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள் வேலை கொடுக்க மறுத்துவிட்டார்கள். மதுரையில்
ஒரு சர்க்கஸ் கம்பெனி இருக்கிறது அதில் சேர்த்துக் கொள்வார்கள் என்று நம்பி வீட்டில் சொல்லிக்
கொள்ளாமல் திருட்டு ரயிலேறி மதுரைக்கு வந்தார். நாடக கலைஞர்
அவர் தேடி வந்த சர்க்கஸ் கம்பெனி அங்கு இல்லை. 

அன்றிரவு மதுரை பிளாட்பாரத்தில் படுத்து தூங்கியவர். வயிற்று பிழைப்புக்காக கசாப்பு கடையில் வேலை செய்தார். அப்போது மதுரையில் நிறைய நாடக கம்பெனிகள் செயல்பட்டு வந்தது. தினமும் நாடகம் பார்க்க
சென்று விடுவார். நாடகத்திற்கும் மக்கள் கைதட்டுவதை பார்த்து நாடக கம்பெனியில் சேர்ந்து விட
முடிவு செய்தார். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் இருந்து விலகிய சிலர் இணைந்து பாலமோஹன சபா என்ற ஒரு நாடக கம்பெனியை ஆரம்பித்தனர்.
அவர்களோடு இணைந்து கொண்டார் பாலையா. அவருக்கு கந்தசாமி முதலியார் என்ற
குரு நடிப்பு சொல்லிக் கொடுத்தார். தனது 15வது வயதில் நாடக மேடை ஏறினார் பாலையா.
சினிமா நடிகர் வெள்ளைக்கார இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கன் சதிலீலாவதி என்ற திரைப்படத்தை இயக்கினார். 
அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் பாலையாவின் நடிப்பு குருவான கந்தசாமி முதலியார். அப்போது அவரின் சிபாரிசின் பேரில் சதிலீலாவதியில் வில்லனாக அறிமுகமானார், பாலையா. அந்தப் படத்தில்தான்
எம்.ஜி.ஆரும் ஒரு சிறிய கேரக்டரில் அறிமுகமானார். அந்த படத்தில் பாலையாவின் நடிப்பு பலராலும்
பாராட்டப்பட்டது. அப்போது சூப்பர் ஸ்டார்களாக இருந்த தியாகராஜ பாகவதர்,
பி.யூ.சின்னப்பா ஆகியோரின் படங்களில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். ஆரியமாலா,
ஜகதலபிரதாபன் படங்கள் பாலையாவை உயர்த்திப் பிடித்தன.

ஹீரோவானார் 1937ம் ஆண்டு தியாகராஜ பாகவதருடன் பாலையா நடித்த அம்பிகாபதி படத்தில், பாகவதரும்
பாலையாவும் போட்ட வாள் சண்டை மிகவும் பிரபலம். அந்த சண்டை காட்சிக்காகவே மக்கள் திரும்ப
திரும்ப படத்தை பார்த்தார்கள். அதேபோல எம்.ஜி.ஆர். ஹீரோவாக அறிமுகமான
ராஜகுமாரி படத்திலும் பாலையாதான் வில்லன். எம்.ஜி.ஆருடன் அவர் போட்ட வாள்
சண்டையை இப்போது பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கும். 

மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் உலகப்போரை மையமாக வைத்து சித்ரா என்ற படத்தை தயாரித்தது. அதில் பாலையா ஹீரோவாக நடித்தார். நடனம் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த ராகிணி பத்மினி சகோதரிகள் மலையாளத்தில் பிரசன்ன என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்கள். அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் பாலையா.
அதன் பிறகு ஹீரோவாக நடிக்கவில்லை. வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களிலேயே நடித்தார்.
தனிமுத்திரை தனக்கென்று தனி மாடுலேஷன், டயலாக் டெலிவரி, மேனரிசம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார்.
வில்லனாக நடித்தாலும் சரி, காமெடியனாக நடித்தாலும் சரி, குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தாலும் சரி அலட்டிக் கொள்ளாமல் நடிப்பார். அவர் வரும் காட்சிகளில் எம்.ஜி.ஆர், சிவாஜி உடன்
நடித்தாலும் அவர்தான் தூக்கலாக தெரிவார். அதுதான் அவருடைய ஸ்பெஷாலிட்டி.
1949ம் ஆண்டு வெளிவந்த வேலைக்காரி படத்தில் பாலையா நடித்த பகுத்தறிவாளன் கதாபாத்திரம் தான்
பின்னாளில் எம்.ஜி.ஆர், சிவாஜி முதல் இன்றைக்கு வருகிற சிவகார்த்திகேயன் வரைக்கும் நடிக்கும்
ஹீரோயிச கதாபாத்திரங்களுக்கு முன்னோடி. பஞ்ச் டயலாக்கெல்லாம்
அப்பவே பாலையா பேசிவிட்டார். செந்தமிழ் பேசி நடித்துக் கொண்டிருந்த சினிமாவில், யதார்த்த தமிழை கொண்டு வந்தவர் பாலையா. சரித்திர படமாக இருந்தாலும் அவரது தமிழ் நடைமுறைத்
தமிழாகத்தான் இருக்கும்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆரை எதிர்க்க துணிவில்லாத தளபதி கேரக்டரில் நடித்திருந்த
பாலையா "எப்பா இன்னிக்கு வெள்ளிக்கிழமை கத்திய கையால தொடக்கூடாதப்பா..."
என்று சமாளிப்பார். எதிரிகளை கோட்டைவிட்டுவிட்டு "மன்னா நாங்கள் பின் தொடர்ந்து சென்றோம்
அவர்கள் முன் தொடர்ந்து சென்று விட்டார்கள்" என்ற வசனம் காலத்தை கடந்தும் மக்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் கதை சொல்லும்போது அதை பலவித முகபாவங்களுடன்
கேட்கும் அந்த நகைச்சுவை காட்சியை அடித்துக் கொள்ள இதுவரை எந்தப் படத்திலும்
காமெடி காட்சி வரவில்லை.
பாகப்பிரிவினை படத்தில் தன் தம்பி எஸ்.வி.சுப்பையாவிடம் கண்ணீர் மல்க அவர் பேசும்
காட்சி இப்போது பார்த்தாலும் கல் நெஞ்சையும் கலங்க வைக்கும். திருவிளையாடல் படத்தில் வித்யா கர்வமிக்க பாடகராக வந்து,"பாண்டிய நாட்டில்
ஒரு விறகு வெட்டியின் பாட்டுக்கு இந்த ஹேமநாதன் அடிமையப்பா" என்று கலங்கி நிற்கும்
காட்சியை இன்னொருவரால் செய்யவே முடியாது.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவர் தவில் வாசிக்கும் பாணி உண்மையான தவில்
வித்வான்களையே கிரங்க வைத்தது. சண்முகசுந்தரத்தை (சிவாஜி) பாதுகாக்க அவர் காட்டும்
அக்கறை நட்புக்கு அடையாளம். மோகனாம்பாளை சந்திக்க திருட்டுத் தனமாக செல்லும் சண்முகசுந்தரத்துக்கு பாதுகாப்பு வேண்டுமே என்று கருதி "தம்பி எனக்கு அங்க ஒரு சோடாக்
கடைக்காரனை தெரியும் நானும் வர்றேன்" என்று கூடவே கிளம்புகிற காட்சி இன்றைய
நட்பு காட்சிகளுக்கு முன்னோடி. இப்படி பாலையாவின் தனித்தன்மை வாய்ந்த கேரக்டர்கள்
பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
வெல்ல முடியாத கலைஞன்
ஒரு படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கேரக்டருக்கு பாலையாவை போட்டு விட்டார்கள். அன்று எம்.ஜி.ஆருக்கு பாலையா மீது கோபம். ஆனால் பின்னாளில் எம்.ஜி.ஆர்., நான் ஏன் பிறந்தேன்
சுயசரிதையில் "அன்று பாலையா நடித்த கேரக்டரில் நான் நடித்திருந்தால் அந்த படம் தோற்றிருக்கும்"
என்று எழுதினார். தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களை அறிமுகப்படுத்திய ஆங்கிலேய இயக்குனர்
எல்லீஸ் ஆர்.டங்கன் சொன்னார் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று. அவர் சொன்னது 100
ஆண்டுகளை கடந்தும் அப்படியே இருக்கிறது.

SOURCE

DINAMALAR

நூற்றாண்டு நினைவு: காலத்தை வென்ற கலைஞன் டி.எஸ்.பாலையா - ஸ்பெஷல் ஸ்டோரி!


படம் : சலீம் 
நடிகர் : விஜய் ஆண்டனி 
நடிகை : அக்ஷா பர்தசானி 
இயக்குனர் :நிர்மல் குமார்



விமர்சனம் » 

சலீம் 

"நான்" படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம். இந்த படமும், முதல் படம் மாதிரியே முத்தான படமாகவும், நான் பட தொடர்ச்சி போன்று முத்தாய்ப்பாகவும் வெளிவந்திருப்பதும் தான் விஜய் ஆன்டனிக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வெற்றி. 

நான் படத்தில் சலீம் எனும் மருத்துவம் படிக்கும் மாணவராக வந்து வித்தியாசமும், விறுவிறுப்புமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆன்டனி, இதில் டாக்டர் சலீம்மாக வந்து தனியார் மருத்துவத்தின் மனிதாபிமானமற்ற குற்றங்களையும், அரசியல்வாதிகளின் வாரிகள் செய்யும் அராஜகங்களையும், அதற்கு உடந்தையக இருக்கும் உயர் அதிகாரிகளையும் அரசியலமைப்பு சட்டங்களையும் தோலுரித்துக்காட்டி திகிலூட்டியிருக்கிறார்! பேஷ்,பேஷ்!! 

கதைப்படி, ஒரு தனியார் மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும்
விஜய் ஆன்டனி, மிகவும் இரக்க சுபாவி! 

ஒருநாள் இரவு., காத்திருக்கும் காதலியை மறந்து, கற்பழிக்கப்பட்ட நிலையில், 'காஸ்ட்லீ' காரில் இருந்து சாலையில் தூக்கி வீசப்படும் அபலை பெண்ணை அள்ளி வந்து சிகிச்சை தருகிறார் டாக்டர் சலீம் எனும் விஜய்! இதனால் வருங்கால மனைவி நிஷாவுடன் நடக்க இருக்கும் திருமணம் நின்று போவது மட்டுமின்றி, பணம், பணம் என்று அலையும் மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்தும் பணிநீக்கம் செய்யப்படுகிறார் ஹீரோ.

 இதில், வெக்ஸாகும் விஜய் ஆன்டனி, எடுக்கும் அவதாரம் தான் சலீம் படம் மொத்தமும்! விஜய் ஆன்டனி, நான் படத்தை காட்டிலும் நடிப்பில் நன்கு முன்னேறி இருக்கிறார். 
டாக்டர் சலீமாக அறுவை சிகிச்சை நிபுணராக அசத்தும் காட்சிகளிலும் சரி, ஏழைப் பெண்ணின் கற்பழிப்பு மற்றும் கொலைக்கு காரணமான அமைச்சரின் வாரிசுகளையும், அவரது சகாக்களையும் பிடித்து வைத்துக்
கொண்டு அசால்டாக காவல்துறை அதிகாரிகளுக்கும், அமைச்சருக்கும் சவால் விடும் இடங்களிலும் சரி,
விஜய் ஆன்டனி வெளுத்து வாங்கியிருக்கிறார். 

இவைகளைக் காட்டிலும் லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டுடன் வந்தாலும் கூட அலட்டும், மிரட்டும் காதலி அக்ஷாவிடம் கனிவும், பணிவும் காட்டும் இடங்களிலும் கூட அமர்க்களமாக நடித்து ஸ்கோர் அள்ளியிருக்கிறார் மனிதர் என்றால் மிகையல்ல! 
புதுமுக நாயகி அக்ஷா, 'பிடிவாத' நிஷா பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறார். சற்றே சதை போட்ட த்ரிஷா மாதிரி இருந்து கொண்டு மிரட்டலான நடிப்பை வழங்கி இருக்கிறார் அம்மணி. சாஃப்ட்டான டாக்டராக, சலீமின் நண்பராக வரும் சாமிநாதனில் தொடங்கி, ஹோம் மினிஸ்டராக வரும்
ஆர்.என்.ஆர்.மனோகர் வரை சகலரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும் அமைச்சர்
தவபுண்ணியமாக வரும் ஆர்.என்.ஆர்.வாவ்சொல்ல வைக்கும் வில்லனாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். 

விஜய் ஆன்டனியின் நடிப்பு மாதிரியே இசையும் சலீம் படத்திற்கு பெரும் பலம்! கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு, புதியவர் நிர்மல் குமாரின் போரடிக்காத புதுமையான எழுத்து, இயக்கம் எல்லாமும் சேர்ந்து விஜய் ஆன்டனியின் சலீம்முக்கு ரசிகர்களை சலாம்போட வைத்துள்ளது! 

மொத்தத்தில் சலீம்முக்கு நாமும் போடுவோம் ஒரு ராயல் சலாம்!!

விமர்சனம் » சலீம்

படம் : மேரி கோம் (இந்தி)
 நடிகர் : சுனில் தபா 
நடிகை : பிரியங்கா சோப்ரா 
இயக்குனர் :ஓமங் குமார்



விமர்சனம் » 

மேரி கோம் (இந்தி)  

பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்திருக்கும்
படம் தான் மேரி கோம்! ஏழை பெண்ணான மேரி கோம்(ப்ரியங்கா சோப்ரா) தன் இலக்கை அடைய எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, ஜெயிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. 

பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமின் வாழ்க்கையை, சிறந்த நடிகையானப்ரியங்கா சோப்ராவை வைத்து, கற்பனைகள் எதையும் கலக்காமல் அற்புதமாக படமாக்கி இருக்கின்றார்
ஓமங் குமார். பின்தங்கிய கிராமம், பாலின பாகுபாடு, அப்பாவின் எதிர்ப்பு என
பல்வேறு தடைகளை கடந்து மேரி கோம் எப்படி குத்துச்சண்டையில் சாதனை படைக்கிறார்,
சாம்பியனாகிறார், அதற்கு அவரது காதல் கணவர் தர்ஷன் குமார், பயிற்சியாளர் நர்ஜித் சிங், உள்ளிட்டோர்
எப்படி உதவுகின்றனர் என்பதை முதல்பாதியில் விறுவிறுப்பாக படமாக்கி இருக்கின்றனர். 

எதிரிகளை இரத்தம் சொட்டும் அளவுக்கு வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தை கொள்ளாமல், யாரையும்
எதிர்த்து நின்று சமாளிக்கும் தைரியம் உள்ள வீர பெண்மணியாக நடித்துள்ளார் மேரி கோமான
ப்ரியங்கா சோப்ரா. 

உண்மையான சாம்பியன்கள் தங்களது இலக்கை அடைய எவ்வளவு தூரம்
கஷ்டப்படுகிறார்கள் என்பதை அழகாகவும், துல்லியமாகவும் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ஓமங்
குமார். போட்டியின் போது ப்ரியங்கா சோப்ரா விடும் குத்துக்கள், நிஜத்தில்
மேரி கோமை பிரதிபலிப்பது போன்றே தோன்றுகிறது. அவர் காட்டும் முகபாவனைகள், போர்க்குணம்
கொண்ட வெளிப்பாடுகள் எல்லாம் மிக அற்புதம்.

 ப்ரியங்காவின் சினிமா கேரியரில் இந்தப்படம் நிச்சயம் ஒரு சிறந்த படமாக அமையும். 
ப்ரியங்கா சோப்ராவின் கணவராக நடித்துள்ள தர்ஷன் குமாரின் நடிப்பும் அற்புதம். 
படத்தில் ப்ரியங்கா சோப்ரா, தர்ஷன் குமார் இருவரும் சிறப்பாக நடித்து இருந்தாலும், ப்ரியங்காவிற்காக தர்ஷன் நிறைய படங்களில் விட்டு கொடுத்து நடித்துள்ளார் போல, இதனால் தர்ஷனை காட்டிலும்
ப்ரியங்காவின் நடிப்பே பெரிதாக தெரிகிறது. இவர்கள் தவிர ப்ரியங்காவின் பயிற்சியாளராக வரும் சுனில்
தபாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.

 ப்ரியங்கா சோப்ராவிற்காக நிச்சயம் மேரி கோம் படத்தை பார்க்க வேண்டும்!

SOURCE

DINAMALAR


விமர்சனம் » மேரி கோம் (இந்தி)


படம் : அமர காவியம் 
நடிகர் : சத்யா 
நடிகை : மியா ஜார்ஜ் 
இயக்குனர் :ஜீவா சங்கர்



விமர்சனம் 

அமர காவியம் 

புத்தகம், தத்துவம் என கலை தாகம் எடுத்துப்போய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தமிழ் சினிமாவில் தலைகாட்டி வந்த தன் தம்பி சத்யாவை நிலைநாட்ட செய்யும் விதமாக முன்னணி இளம் நடிகர் ஆர்யா, தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்திருக்கும் திரைப்படம் தான் அமரகாவியம்!. 1988ம் ஆண்டு தான் அமரகாவியம் கதை நடைபெறும் காலகட்டம்! ஊட்டி கான்வெண்டில் பள்ளி இறுதியாண்டு படிக்கும் நாயகர் சத்யாவுக்கும், அறிமுக நாயகி மியாவிற்குமிடையே காதல் மலர்கிறது.
 பூத்து, காய்த்து, கனியாக வேண்டிய அந்த காதல், சுற்றம், நட்பு, சொந்தம், பந்தத்தின் ஈகோ,
பிகு...இத்யாதி, இத்யாதிகளால் காய்ந்து, கருகி..காணாமல் போகிறதா? அல்லது கருகிப் போனாலும்,
உருகிப் போகாமல் அமரத்துவம் பெறுகிறதா? என்பது தான் அமரகாவியம் படத்தின் கரு, கதை, களம்
எல்லாம்!. 

நாயகர் சத்யா, முந்தைய படங்களைக் காட்டிலும் நன்றாகவே நடித்திருக்கிறார். கல்லூரி காளையாக திரிய வேண்டிய ஹயிட்டும், வெயிட்டுமுடைய அவரை, பள்ளிக்கூட பையனாக மீசை,
தாடியை மழித்து படம் முழுக்க பவனி வர செய்திருக்கும் மைனஸை தவிர, சத்யாவின் நடிப்பிலும்
துடிப்பிலும் பெரிதாக குறை ஏதும் சொல்ல முடியாது. காதல் காட்சிகளில் அண்ணன் ஆர்யாவிடம்
தம்பி இன்னும் கொஞ்சம் படிக்க வேண்டும் மற்றபடி, சத்யா டபுள் ஓ.கே! புதுமுகம் மியா, பொம்மை பூனை மாதிரி பெயருக்கேற்றபடியே இருந்து கொண்டு, காதல் காட்சிகளில்
சத்யாவை ஐ லவ் யூ சொல்லச் சொல்லி உருட்டுவதும், மிரட்டுவதுமான ரசனையான காட்சிகள்
அமரகாவியம் படத்திற்கு பலம் சேர்க்கிறது. 

தம்பி ராமையா படத்தில் கெஸ்ட்ரோலில் வந்து போகிறாரா? அல்லது கால்ஷீட் சரிவர இல்லாததால் படம் முழுக்க இல்லாமல் போகிறாரா? என்பதற்கு சாலமன் பாப்பையா தலைமையில் தனியாக ஒரு பட்டிமன்றமே வைக்கலாம்! அனந்த்நாக், அருள்ஜோதி, எலிசபெத், வைத்தியநாதன், ரிந்து ரவி உள்ளிட்டவர்களின் பாத்திரங்கள் பளிச்! ஜிப்ரானின் இசையில் ரீ-மிக்ஸாக இல்லாமல் லைவ்வாக பின்னணியில் ஒலிக்கும் 1988 இளையராஜா பாடல்கள் இதம்! இப்படியும், கண்ணியமான காதல்கள் 1988-களில் இருந்தது என்பதை இந்த தலைமுறையும் தெரிந்து கொள்ள வேண்டும் என அமரகாவியம் படம் எடுக்கப்பட்டிருந்தாலும், இப்படியெல்லாமா? சுத்தசைவமாக காதலிப்பார்கள்?! என இக்கால இளைஞர்கள் கேட்கும் வாய்ப்புமிருப்பதால், ஜீவா சங்கரின் எழுத்து, ஒளிப்பதிவு, இயக்கத்தில் உருவாகி இருக்கும்
‛அமரகாவியம்' இன்றைய பாஸ்ட்புட்(எல்லா விதத்திலும் தான்) ரசிகர்களின் நெஞ்சில் அமரத்துவம் பெறுமா? என்பது சந்தேகமே! 

ஆக மொத்தத்தில், ‛‛இன்றைய இளைஞர்களின் நெஞ்சில், அமர வேண்டிய காவியம் - அமரகாவியம்.
ஆனாலும், அவர்களிடத்தில் அமர(ரா) காவியம்?!''

source

DINAMALAR

விமர்சனம் » அமர காவியம்


படம் : இரும்புக்குதிரை 
நடிகர் : அதர்வா 
நடிகை : ப்ரியா ஆனந்த் , ராய் லட்சுமி 
இயக்குனர் :யுவராஜ் போஸ்




விமர்சனம் » 

இரும்புக்குதிரை 

முரளியின் வாரிசு அதர்வா நடித்து வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்! மாற்றத்திற்கான படமோ.,
மாற்று சினிமாவுக்கான படமோ அல்ல... இந்த ‛இரும்புக்குதிரை என்பது தான் வேதனை! சிலருக்கு குதிரை, குதிரை ரேஸ் பிடிக்கும்... பலருக்கு குதிரை மாதிரி பெண்களை பிடிக்கும்...
ஒரு சிலருக்கு ‛இரும்புக்குதிரை மாதிரி பறக்கும் பைக்குகளை பிடிக்கும்...
அப்படி நாயகி ப்ரியா ஆனந்துக்கு விதவிமான பைக்குகளையும், அதன் சப்தங்களையும் பிடிக்கிறது.
அவருக்காகவே ப்ரியாவின் காதலர் அதர்வா, தன் வாழ்க்கையில் பெரும் இழப்பு ஏற்பட காரணமான
‛டுக்காட்டி' ரேஸ் பைக்கையே வாங்குகிறார்! அப்புறம்? அப்புறமென்ன.? அந்த பைக்கின் பின்னால்
காதலி ப்ரியாவை வைத்துக் கொண்டு சாலைகளில் பறக்கிறார். எஞ்சிய நேரங்களில் ரேஸ்., சேஸ்... என்று புகுந்து புறப்படுகிறார். இதில் எதிர்பாராமல் வில்லனை சந்திக்கும் அதர்வா, அவரிடம்,
காதலி ப்ரியாவையும், தன் பிரியத்திற்குரிய பைக்கையும் இழக்கும் சூழல். இரண்டையும்
வில்லனுடனான சவாலில் ஜெயித்து எப்படி மீட்கிறார்! என்பதுதான் ‛இரும்புக்குதிரை படத்தின்
தலையை சுற்றி மூக்கை தொடும் முழுநீளக்கதை! அதர்வா, சிக்ஸ்பேக், டுக்காட்டி பைக் என ஹீரோவாக நிற்கிறார். ஆனால் கேரக்டராக ஜொலிக்கவில்லை.

தன் படத்தில் ப்ரியா ஆனந்த், ராய் லட்சுமி(லட்சுமி ராய்) மாதிரி சதைகளை நம்பாமல் இனியாவது அதர்வா,
நல்ல கதைகளை கேட்டு நடிக்க வேண்டுமென்பது நம் அவா மட்டுமல்ல... ரசிகர்களின் விருப்பமும்கூட!
செய்வாரா அதர்வா? பொறுத்திருந்து பார்ப்போம்!! ப்ரியா ஆனந்த், வழக்கம்போலவே வட இந்திய நடிகைகளையும் தாண்டி கவர்ச்சி காட்டி இருக்கிறார்.

ஆனால், படத்தில் பைக் விற்கும் பந்தா பெண்ணாக வரும் லட்சுமிராயின் திரட்சிக்கும், கிளர்ச்சிக்கும்
முன் ப்ரியாவின் பிசாத்து கவிச்சி சாரி, கவர்ச்சி பிசுபிசுத்து போகிறது பாவம்!
ப்ரியாவிற்கு லட்சுமி பெட்டர்! ஏழாம் அறிவு ஜானியின் வில்லத்தனம் தான் படத்தின் பெரும்பலம்! அதுவும் எப்படியும் இறுதியில் ஹீரோ தான் ஜெயிப்பார்... என்பதை உணரும் போது பலவீனமாகிவிடுகிறது. ஆனாலும், ரியல் லேடி ரேஸ் பைக்கர் அலிஷா அப்துல்லா, வில்லன் ஜானியின் ஜோடியாக பைக் ஓட்டி மிரட்டுவதும், இன்னும் சில விஷயங்களில் ரசிகர்களை மிரள செய்வதும் ஆறுதல்! ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் சரி, பாடல்கள் இசையும் சரி மிரட்டவில்லை, ரசிகர்களை தியேட்டரவை விட்டு விரட்டுகிறது. 

ஒளிப்பதிவாளர் குருதேவின் ஒளிப்பதிவு கச்சிதம்! தேவதர்ஷினியின் டிராமாட்டிக் நடிப்பு, கதையிலும், திரைக்கதையிலும் இல்லாத விறுவிறுப்பு, டுக்காட்டி பைக்கை யார் வைத்திருந்தாலும் அவர்களை விரட்டிப்பிடிக்கும் வில்லன் ஜானி, ஒருகாட்சியில், கைக்கெட்டிய தம்பியின் டுக்காட்டி பைக்கை தான், ஹீரோவிடம் விட்ட சவாலுக்காக
மறந்துவிட்டு நாயகி ப்ரியா ஆனந்த்தை மட்டும் தூக்கி செல்வதும், அப்புறம் என்
பைக்கை திரும்பி கொடு... என்று ஹீரோவிடம் கேட்பதும், கெஞ்சுவதும் கொஞ்சம் மிஞ்சுவதும் செம
காமெடி. இதுமாதிரி மிகப்பெரும் ஓட்டைகள்... புதியவர் யுவராஜ் போஸின் இயக்கத்தில், ‛இரும்புக்குதிரையை நொண்டிக்குதிரையாகவும் சண்டிக்குதிரையாகவும் ஆக்கிவிடுகிறது. 
மொத்தத்தில், ‛‛இரும்புக்குதிரை - சண்டிக்குதிரை - நொண்டிக்குதிரை!

source

DINAMALAR

விமர்சனம் » இரும்புக்குதிரை